ஒலி வடிவில் கேளுங்கள்
நாகப்பட்டினம் மீனவ குலத்தில் பிறந்தார் அதிபத்தர். அவர் அக்குலத்தின் தலைவராக இருந்தார். வலைவீசி எடுக்கின்ற மீன்களில் ஒன்றை நடமாடும் எம் பெருமானுக்கு என கடலில் போட்டு விடுவார். தொடர்ந்தாற்போல் பல நாள் போராடியும் ஒரு மீன் கூட வலையில் சிக்கவில்லை. அனைவரும் சோர்ந்து போனர்கள். அதிபத்தர் இறைவனுக்கு அமுது படைக்க மீன் கிடைக்கவில்லை என்று வருந்தினார்.
ஒருநாள் பொன்னொளி வீசும் ஒரு மீன் கிடைத்தது. அதைப் பிடித்து என்னை ஆளும் சிவனுடைய பொன்னடிகள் போய்ச் சேரட்டும் என கடலில் வீசினார். அவருடைய அதிபக்தியைக் கண்ட பெருமான் தோன்றி அவருக்கு அருள் புரிந்தார்.
நாகப்பட்டணம் சிவன் கோவில் அதிபக்திநாயனார் கோவில் என வழங்கப்படுகிறது.
இறைவன்: காயரோகணேஸ்வரர்
இறைவி : நீலாயதாட்சியம்மை
தலமரம் : மா
தீர்த்தம் : புண்டரிக தீர்த்தம்
குலம் : நுளையர்
அவதாரத் தலம் : நம்பியார் நகர்
முக்தி தலம் : நம்பியார் நகர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) :ஆவணி – ஆயில்யம்
https://maps.app.goo.gl/eFvT2H2tK5GGhhDw9
https://maps.app.goo.gl/eFvT2H2tK5GGhhDw9
More Stories
4. அரிவாட்டாய நாயனார்
3. அமர்நீதி நாயனார்
2. அப்பூதியடிகள் நாயனார்